Featured Posts

TamilhackX

Featured Posts

Thursday, March 24, 2011

கணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox !

- 9 comments
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.

இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.

இதனால் நமக்கு தேயையான கோப்புக்களை Pen drive இல் கொண்டுபோகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் கோப்புக்கள் பத்திரமாக encrypt பண்ணப்பட்ட நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட Dropbox Server களில் சேமிக்கப்பட்டு இருக்கும்.

ஒரு வேளை Dropbox இக்குள் இருக்கும் முக்கியமான கோப்புகளை தவறுதலாக நீங்கள் அழித்து விட்டாலும் பயப்படத் தேவையில்லை Dropbox இல் அழித்த கோப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உண்டு.

ச் சேவையைப் பெற்றுக்கொள்தற்கு முதலில் Dropbox இல் உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் பின் உங்கள் கணணியில் Dropbox இனால் வழங்கப்படும் மென்பொருளை Install செய்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் கணணியில் Dropbox என்ற ஒரு Folder உருவாக்கி இருக்கும்.


இனி நீங்கள் அந்த Dropbox folder இல் போடும் எந்த ஒரு கோப்பும் இணைய இணைப்புள்ள எந்தக் கணணியில் இருந்தும் www.dropbox.com என்ற தளத்தினுடாக அல்லது நீங்கள் நிறுவியுள்ள Dropbox மென்பொருளினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

Dropbox மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவியவுடன் Public, Photos என்ற இரண்டு Folder கள் உருவாகியிருக்கும்.

இதில் Public என்ற Folder இனுள் போடும் கோப்புக்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம் அந்த கோப்பின் மேல் Right click செய்து Public Link ஐ copy செய்து email மூலமாக அல்லது ஏதாவது சமூகவலைத் தளங்களின் மூலம் வேறு ஒருவருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

அதே போல் Photos என்ற Folder இனுள் உங்கள் படங்கள் உள்ள Folder போட்டு விட்டு நீங்கள் போட்ட அந்த folder இனுள் Right click செய்து Copy Public Gallery link என்பதை Click செய்து உங்கள் Photo Gallery க்கான அந்த link உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.


மேலும் Dropbox இக்குள் இருக்கும் விரும்பிய ஒரு Folder ஐ நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் அந்த Folder இல் நீங்கள் போடும் கோப்புக்களை உங்கள் நண்பரும், உங்கள் நண்பர் போடும் கோப்புகளை நீங்களும் பயன்படுத்த முடியும்


Dropbox
இனுள் Public , Photos எனும் இவ் இரு Folder கள் தவிர மற்றைய Folder இனுள் போடும் உங்கள் கோப்புக்களை உங்களைத் தவிர வேறு யாராலும் பார்க்க முடியாது. (ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட Folder ஐ Share பண்ணியிருந்தீர்கள் என்றால் நீங்கள் Share பண்ணிய அந்த நண்பரும் பார்க்க முடியும் )

Dropbox இல் நீங்கள் பதிவு செய்வதன் மூலம் இலவச 2 GB சேமிப்பிடத்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் Dropbox கணக்கில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களை Dropbox இல் இணைப்பதன் முலம் உங்கள் சேமிப்பிடத்தை 8GB வரை அதிகரிக்க முடியும் .

Dropbox இனை கணணியில் மட்டுமல்ல iPhone, android போன்ற நவீன கையடக்கத் தொலைபேசிகளிலும் பயன்படுத்தலாம் என்பது இதன் இன்னொரு சிறப்பாகும்

மேலும் Dropbox இன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ள இங்கே செல்லவும்

Wednesday, April 14, 2010

ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?

- 6 comments
நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.

இவ்வாறு வீணடிக்காமல் ஒரே clickஇல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம்

இந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, wordpressபோன்ற Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும்.


அதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும்.


முதலில் HelloTxt .com என்ற தளத்துக்கு சென்று உங்களுக்குரிய பயனாளர் கணக்கை உருவாக்கிக் பண்ணிக் கொள்ளுங்கள் பின் Setting இக்குச் சென்று ஒரே நேரத்தில் stutus update பண்ண விரும்பும் சமூக வலைத்தளங்களில் உங்களுக்குரிய username, password ஐக் கொடுத்து அந்தத் தளங்களை add பண்ணிக் கொள்ளுங்கள்.


அவ்வளவு தான் இனி நீங்கள் HelloTxt மூலமாக மேற்கொள்ளும் ஒவ்வொரு Update க்களும் நீங்கள் தெரிவு செய்த எல்லா தளங்களிலும் Update ஆகும்

தள முகவரி : http://hellotxt.com/

Monday, December 28, 2009

மென்பொருட்களின் பழைய பதிப்புக்களை download செய்ய உதவும் இணையத்தளங்கள்

- 4 comments
மென்பொருள் தயாரிப்பாளர்கள் தங்கள் மென்பொருட்களில் சில புதிய விடயங்களைப் சேர்த்தும் அல்லது பழைய பதிப்புக்களில் உள்ள பிழைகளைத் திருத்தியும் புதிய பதிப்புக்களாக (Version) வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சில சந்தர்பங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளின் புதிய பதிப்பை விட பழைய பதிப்பு பிடித்திருந்தால் அல்லது நமது கணணி அந்த மென்பொருளின் புதிய பதிப்புக்கு Support பண்ணாதிருந்தால் நாம் அந்த மென்பொருளின் பழைய பதிப்பையே விரும்புவோம்.

இவ்வாறான பழைய பதிப்புக்களை download பண்ணுவதற்கு உதவும் இணையத்தளங்களைப் பற்றி இனிப் பார்ப்போம்



இந்த தளத்தில் பொதுவாகப் நாம் பாவிக்கும் அனைத்து மென்பொருட்களினதும் பழைய பதிப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இங்கு மென்பொருட்களைப் Browsers and Desktop, Audio and Video, Security and AntiSpyware, FTP and Compression, File Sharing, Communication/IM, Office and News, Developer and Networking, Imaging , Utilities போன்ற வகைகளாகப் பிரித்து தந்திருக்கிறார்கள்

தள முகவரி : http://www.versiondownload.com/



இந்தத் தளத்தில் தற்போது 190 மென்பொருட்களின் பழைய பதிப்புக்கள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் Mac இயங்குதளத்துக்குரிய மென்பொருட்களையும் download பண்ணிக்கொள்ள முடியும்

தள முகவரி : http://www.oldversion.com/

மேற்கூறிய இணையத்தளங்கள் போன்று பின்வரும் இணையத்தளங்களிலும் மென்பொருட்களின் பழைய பதிப்புக்களை தரவிறக்கிக் கொள்ளலாம்

Saturday, October 31, 2009

PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ?

- 10 comments
இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது.

இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும்.

இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம்


முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள்

பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இடத்தில் PowerPoint இல் authorSTREAM என்ற tab ஐக் click செய்து அதில் உள்ள Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து வீடியோ என்பதைக் Click செய்யவும்.

அப்போது authorSTREAM ஆனது YouTube தளத்தில் உங்களுக்கான வீடியோவைத் தேடி பட்டியலிடும் அதில் உங்களுக்கு விரும்பிய வீடியோவின் கீழ் இருக்கும் பச்சைக் நிற Preview button ஐக் click செய்து அந்த வீடியோவின் Preview ஐப் பார்த்துவிட்டு Insert பண்ணிக் கொள்ள முடியும். அல்லது Insert by URL என்பதைக் Click செய்து உங்களுக்கு விரும்பிய வீடியோவின் URL ஐக் கொடுப்பதன் மூலமும் வீடியோக்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

அதே போல Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து Image என்பதைக் Click செய்து Bing தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் படங்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

நீங்கள் authorSTREAM தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உருவாகிய PowerPoint Presentation களை Upload பண்ணி உங்களுக்கு விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .

மென்பொருளைத் தரவிறக்க : http://www.authorstream.com/desktop/

Wednesday, October 28, 2009

My Computer இல் இருந்து Floppy Drive இன் Icon ஐ நீக்குவது எப்படி?

- 2 comments
தற்போது Floppy Drive இன் பாவனை இல்லை என்று சொல்லுமளவுக்கு Floppy Drive இன் பாவனை இல்லாமல் போய் விட்டது என்றாலும் விண்டோஸ் இன் My Computer இல் Floppy Drive இன் Icon ஒரு தேவையில்லாத ஒரு Icon ஆக இருக்கின்றது.

இந்த Floppy Drive இன் Icon னை எவ்வாறு My Computer இல் இருந்து தற்காலிகமாக நீக்குவது என்று பாப்போம்

முதலில் Run க்கு சென்று devmgmt.msc என Type செய்து Ok பண்ணவும். அல்லது My Computer இன் Icon இல் Right click செய்து Device Manager என்பதை தெரிவு செய்யவும்.

அப்போது Device Manager ஆனது Open ஆகும்.

அதில் Floppy Disk Drive என்பதன் முன்னால் இருக்கும் + குறியீட்டைக் Click செய்யவும். பின் அதில் வரும் Floppy Disk Drive என்பதன் மேல் Right Click செய்து Disable என்பதை Click செய்யவும்.

அப்போது வரும் "disabling this device will cause it to stop functioning. Do you really want to disable it?" என்ற Meassage box இல் yes என்பதை தெரிவு செய்யவும்.

இப்பொழுது உங்கள் My computer இல் இருந்து Floppy Drive இன் icon மறைந்திருக்கும்.

எதாவது சந்தர்ப்பத்தில் உங்களுக்கு Floppy Drive தேவைப்பட்டால் மேற்கூறிய முறையில் Device Manager க்கு சென்று Floppy Disk Drive ஐ Enable பண்ணிக் கொள்ள முடியும்.