Featured Posts

TamilhackX

Showing posts with label Web Sites. Show all posts
Showing posts with label Web Sites. Show all posts

Wednesday, April 14, 2010

ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?

- 6 comments
நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.

இவ்வாறு வீணடிக்காமல் ஒரே clickஇல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம்

இந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, wordpressபோன்ற Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும்.


அதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும்.


முதலில் HelloTxt .com என்ற தளத்துக்கு சென்று உங்களுக்குரிய பயனாளர் கணக்கை உருவாக்கிக் பண்ணிக் கொள்ளுங்கள் பின் Setting இக்குச் சென்று ஒரே நேரத்தில் stutus update பண்ண விரும்பும் சமூக வலைத்தளங்களில் உங்களுக்குரிய username, password ஐக் கொடுத்து அந்தத் தளங்களை add பண்ணிக் கொள்ளுங்கள்.


அவ்வளவு தான் இனி நீங்கள் HelloTxt மூலமாக மேற்கொள்ளும் ஒவ்வொரு Update க்களும் நீங்கள் தெரிவு செய்த எல்லா தளங்களிலும் Update ஆகும்

தள முகவரி : http://hellotxt.com/

Monday, December 28, 2009

மென்பொருட்களின் பழைய பதிப்புக்களை download செய்ய உதவும் இணையத்தளங்கள்

- 4 comments
மென்பொருள் தயாரிப்பாளர்கள் தங்கள் மென்பொருட்களில் சில புதிய விடயங்களைப் சேர்த்தும் அல்லது பழைய பதிப்புக்களில் உள்ள பிழைகளைத் திருத்தியும் புதிய பதிப்புக்களாக (Version) வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சில சந்தர்பங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளின் புதிய பதிப்பை விட பழைய பதிப்பு பிடித்திருந்தால் அல்லது நமது கணணி அந்த மென்பொருளின் புதிய பதிப்புக்கு Support பண்ணாதிருந்தால் நாம் அந்த மென்பொருளின் பழைய பதிப்பையே விரும்புவோம்.

இவ்வாறான பழைய பதிப்புக்களை download பண்ணுவதற்கு உதவும் இணையத்தளங்களைப் பற்றி இனிப் பார்ப்போம்



இந்த தளத்தில் பொதுவாகப் நாம் பாவிக்கும் அனைத்து மென்பொருட்களினதும் பழைய பதிப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இங்கு மென்பொருட்களைப் Browsers and Desktop, Audio and Video, Security and AntiSpyware, FTP and Compression, File Sharing, Communication/IM, Office and News, Developer and Networking, Imaging , Utilities போன்ற வகைகளாகப் பிரித்து தந்திருக்கிறார்கள்

தள முகவரி : http://www.versiondownload.com/



இந்தத் தளத்தில் தற்போது 190 மென்பொருட்களின் பழைய பதிப்புக்கள் தரப்பட்டுள்ளன. இத்தளத்தில் Mac இயங்குதளத்துக்குரிய மென்பொருட்களையும் download பண்ணிக்கொள்ள முடியும்

தள முகவரி : http://www.oldversion.com/

மேற்கூறிய இணையத்தளங்கள் போன்று பின்வரும் இணையத்தளங்களிலும் மென்பொருட்களின் பழைய பதிப்புக்களை தரவிறக்கிக் கொள்ளலாம்

Sunday, August 30, 2009

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

- 16 comments
சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

Friday, May 8, 2009

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள் - 2

- 8 comments
இலவச மென்பொருட்கள்...

தினமும் ஒவ்வொரு பெறுமதியான மென்பொருட்கள் இலவசமாக (சட்டரீதியாக) வழங்கப்படுகிறது. மறுநாள் அம் மென்பொருளை நீங்கள் பணம் செலுத்தி தான் பெற முடியும்
தள முகவரி :  http://www.giveawayoftheday.com/


யாருடைய இணையத்தளம்... 

நாம் பார்க்கும் இணையத்தளமானது யாருக்கு சொந்தமானது, யாருடைய பெயரில் டொமைன் பதிவுசெய்யப்பட்டுள்ளது, எந்த Server இல் இயங்குகிறது எவ்வளவு காலத்துக்கு டொமைன் பதிவு செயப்பட்டிருக்கிறது என்பவற்றை அறிய (.COM, .NET, .EDU மட்டும்)
தள முகவரி : http://www.allwhois.com/


DHTML Source code...

இணையத்தளம் வடிவமைப்போருக்கு மிகவும் பயனள்ள தளம் DHTML Source code போன்றவற்றை இலவசமாக டவுன்லோட் செய்யலாம்
தள முகவரி : http://www.getelementbyid.com/

உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான Guest Book போன்றவற்றை...

உங்கள் வலைப்பதிவுக்கு தேவையான  Guest Book, Email Forms,  Message Forum,போன்றவற்றை இலகுவாக உருவாக்கி உங்கள் வலைப்பூவில் இணைப்பதற்கு
தள முகவரி : http://www.bravenet.com/

Online இல் Icon  களை வடிவாமைப்பதட்கு...

Online இல் உங்களுக்கு தேவையான Icon களை வடிவாமைப்பதற்கு உதவும் தளம் இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான படத்தை Upload பண்ணி அப்படத்தையும் Icon ஆக மாற்றலாம்



Thursday, April 23, 2009

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள் -1

- 15 comments
சுருக்க குறியீடுகளை அறிய... 
எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும் 
தள முகவரி : http://www.acronymfinder.com/

விண்டோஸ் நுட்பங்கள் அறிய...

பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://windowssecrets.com/

பீட்டா பதிப்புகளை அறிய...
 
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு. 
தள முகவரி : http://www.betanews.com/

இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...

HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/

தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி 

ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/

தொழில்நுட்ப உதவிகளுக்கு...

கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும் 
தள முகவரி :http://techguy.org/

Thursday, February 26, 2009

உங்களுக்கு பிடித்த இணையம் ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என அறிய...

- No comments
அன்று ஒரு நாள் வலையில் மேய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தான் archive.org இத் தளம் சற்று வித்தியாசமானதும் சுவரசியமானதுமாகும்.

இத் தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் இத் தளமானது நீங்கள் முகவரி கொடுத்த இணயம் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்கள் படத்தில் பார்ப்பது 1998 ஆம் ஆண்டு Google முதல் முதலாக வெளியிட்ட இணையப் பக்கமாகும்.

நீங்கள் விரும்பிய முகவரியக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்

தள முகவரி: http://www.archive.org/