Featured Posts

TamilhackX

Tuesday, October 26, 2010

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

- 11 comments
சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.

எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script
ஆகும்.

Unfriend Finder மூலம் Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignore பண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்கு மட்டும் பொருந்தும்.)

Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.

இனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.

Wednesday, April 14, 2010

ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?

- 6 comments
நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.

இவ்வாறு வீணடிக்காமல் ஒரே clickஇல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம்

இந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, wordpressபோன்ற Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும்.


அதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும்.


முதலில் HelloTxt .com என்ற தளத்துக்கு சென்று உங்களுக்குரிய பயனாளர் கணக்கை உருவாக்கிக் பண்ணிக் கொள்ளுங்கள் பின் Setting இக்குச் சென்று ஒரே நேரத்தில் stutus update பண்ண விரும்பும் சமூக வலைத்தளங்களில் உங்களுக்குரிய username, password ஐக் கொடுத்து அந்தத் தளங்களை add பண்ணிக் கொள்ளுங்கள்.


அவ்வளவு தான் இனி நீங்கள் HelloTxt மூலமாக மேற்கொள்ளும் ஒவ்வொரு Update க்களும் நீங்கள் தெரிவு செய்த எல்லா தளங்களிலும் Update ஆகும்

தள முகவரி : http://hellotxt.com/