Featured Posts

TamilhackX

Sunday, August 30, 2009

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

- 16 comments
சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.
இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை தரம் படிக்கிறார். அவர் மின்னஞ்சலை படிக்கும் கணணியின் IP Address போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் உடனுக்குடன் எமக்குத் தெரியப்படுத்தும்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது மின்னஞ்சலை எழுதி முடிந்தவுடன் இந்த இணையத்தளத்துக்கு சென்று உங்கள் மினஞ்சல் முகவரியையும் உங்கள் மின்னஞ்சலுக்கான தலைப்பையும் கொடுக்க வேண்டும்

பின் Select your SpyPig tracking image என்ற இடத்தில் உள்ள எதாவது ஒரு படத்தினை தெரிவு செய்து Number of notifications to receive என்ற இடத்தில் உங்களுக்கு மின்னஞ்சல் பெறுபவர் எத்தனை முறை உங்கள்
மின்னஞ்சலைப் படிக்கும் போது உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதனையும் தெரிவு செய்யவும்

பின் கீழ் உள்ள click to activate my spypic என்ற Button ஐக் click செய்யவும் அப்போது கீழ் உள்ள பெடடியில் நீங்கள் தெரிவு செய்த படம் தோன்றும் அந்த படத்தினை ஒரு நிமிடத்துக்குள் Copy செய்து நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலில் ஏதாவது ஒரு இடத்தில் paste செய்து அந்த மின்னஞ்சலை சாதரண மின்னஞ்சல் போல் அனுப்பவும். அந்த மின்னஞ்சல் திறந்து படிக்கும் போது உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

தள முகவரி : http://www.spypig.com/

Saturday, August 22, 2009

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?

- 15 comments
ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

  • முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
  • பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
  • பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
  • பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

Sunday, August 16, 2009

விடுதலை நாளிதழில் TamilhackX இன் படைப்புக்கள்

- 16 comments
தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்ப்பட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை நாளிதளின் இந்த வார ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.

இனி வரும் வாரங்களில் வெளியாகும் விடுதலையின் ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என்பதினை மட்டற்ற மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.

பவளவிழா ஆண்டில் காலடி பதித்திருக்கும் விடுதலை நாளிதழ் தமது வாசகர்களுக்கு தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்குவது பாராட்டத்தக்க விடயமாகும். அதில் TamilhackX க்கும் சிறு பங்களிப்பு இருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது .

விடுதலை நாளிதழில் வெளியான TamilhackX இன் ஆக்கம்

எனது வலைப் பூவிற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து ஆக்கங்களை முதல் முதலில் பத்திரிகையில் வெளியிட்ட விடுதலை நாளிதழுக்கு
TamilhackX இன் கோடன கோடி
நன்றிகள்

விடுதலையின் இணையப் பதிப்பு : http://www.viduthalai.com/

Thursday, August 13, 2009

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்

- 15 comments
நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்

இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன

Ctrl + N : புதிய விண்டோவை open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + T : புதிய tab ஐ open பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + W : தற்போது திறந்துள்ள tab ஐ மூடுவதற்கு உதவும்.

Ctrl + D : பார்த்துக் கொண்டிருக்கும் இணையத்தளத்தை Bookmark செய்வதற்கு உதவும்.

Ctrl + H : உங்கள் உலாவியின் history ஐப் பார்ப்பதற்கு உதவும்.

F5 : திறந்திருக்கும் இணையப் பக்கத்தை Refresh செய்வதற்கு உதவும்.

Ctrl + F5 : வன்மையான Refresh. அதாவது பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தின் cache எல்லாவற்றையும் நீக்கி விட்டு அந்த இணையப் பகத்தின் புதிய பிரதியினைத் தரும்.

Ctrl + L அல்லது Alt +D அல்லது F6 (Opera வில் வேலை செய்யாது ) : திறந்திருக்கும் இணையப்பக்கத்தின் முகவரியை Address bar இல் Highlight பண்ணுவதற்கு உதவும்.

Ctrl + E : இது உங்கள் cursor ஐ Browser இன் search bar க்கு நகர்த்தும்.

Ctrl + F : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு சொல்லைத் தேடுவதற்கு உதவும்.

Ctrl + (+/-) : பார்க்கும் இணையப் பக்கத்தினை Zoom செய்து பெரிதாக்குவதற்கும் / சிறிதாக்குவதற்கும் உதவும்.

Ctrl + C அல்லது Ctrl + V Copy செய்வதற்கும் / Paste செய்வதற்கும் உதவும்.

Home / End : பார்க்கும் இணையப்பக்கத்தின் தொடக்கத்திற்கும் /முடிவுக்கும் செல்வதற்கு உதவும்.

Ctrl + U : நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் இணையப்பக்கத்தின் Source code ஐப் பார்ப்பதற்கு உதவும்.

Ctrl + Click (Opera வில் வேலை செய்யாது ) : இணையப்பக்கத்தில் இருக்கும் எதாவது ஒரு Link ஐப் Ctrl ஐ அழுத்திக்கொண்டு Click செய்யும் போது அந்த link ஆனது புதிய tab இல் திறக்கும்.

Ctrl + left Click (Opera இல் மட்டும் ) : நாம் பார்க்கும் படங்களை save பண்ணுவதற்கு அதாவது இணையப் பக்கத்தில் இருக்கும் Image ஐ Right click செய்து Save பண்ணுவதற்கு பதிலாக Opera இல் Ctrl ஐ அழுத்திக் கொண்டு அந்த Image ஐக் Click பண்ணினால் அந்த Image Save ஆகும்

Ctrl + Shift + T : பார்த்து விட்டு கடைசியாக மூடிய tab ஐ மீளத் திறக்க முடியும்

Ctrl + Enter : http://www. , .com என type செய்து நேரத்தை செலவழிக்காமல் இணையத்தளத்தின் பெயரை type செய்து விட்டு Ctrl + Enter அழுத்தினால் http://www. , .com என்பனவற்றை Browser ஆனது தானகவே போட்டுக்கொள்ளும். உதாரணமாக http://www.google.com/ என type செய்வதற்கு google என type செய்து Ctrl + Enter ஐ அழுத்துதல் வேண்டும்.

Shift + Enter : http://www. , .net என்பதை பூர்த்தி செய்வதற்கு

Ctrl + Shift + Enter : http://www. , .org என்பதை பூர்த்தி செய்வதற்கு

இதை விட வேறு எதாவது Browser இல் பாவிக்கக் கூடிய இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

Saturday, August 8, 2009

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

- 7 comments
Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்


இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில் ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும் .

விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம் மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக் கொள்ளலாம்.

மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம் அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

மேலதிக தகவலுக்கு: http://www.cubedesktop.com/

மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/nf5ixcgbff