Featured Posts

TamilhackX

Saturday, August 22, 2009

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்

உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

  • முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
  • பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
  • பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
  • பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

15 on: "Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?"
  1. very useful idea good and thanks.
    maharaja

    ReplyDelete
  2. மன்னிக்கவும் winMend எனும் சாப்ட்வேர் மிக எளிதாக உள்ளது. notepad இல நிறைய விஷயங்கள் memory இல வைத்துக்கொள்ள நேர்கிறது.

    ReplyDelete
  3. good trick.. very useful
    Thanks a lot..

    G.R..

    ReplyDelete
  4. பல வழிகள் இருப்பினும் இது ஒரு எளிய வழியாகத்தெரிகிறது.

    'tamil' எனும் folderஐ லாக் செய்ய எழுதியுள்ளீர்கள் இதையே parameters pass செய்து எந்த folderக்கும் (notepadல் மாற்றம் செய்யாமலே) ஏதுவாக எழுதிடுங்களேன்.

    ReplyDelete
  5. இது Windows Explorer மாத்திரம் தான் வேலை செய்யும்.
    முழுவதுமாக பாதுகாப்பில்லை.

    நன்றி இணைப்பிற்கு....
    anonymous

    ReplyDelete
  6. அருமையான தகவல்

    ReplyDelete
  7. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி maharaja, 2009kr, G.R, நட்புடன் ஜமால், Anonymous

    //2009kr said...
    மன்னிக்கவும் winMend எனும் சாப்ட்வேர் மிக எளிதாக உள்ளது. notepad இல நிறைய விஷயங்கள் memory இல வைத்துக்கொள்ள நேர்கிறது.

    நான் ஆரம்பத்திலியே கூறியிருந்தேன் இதற்காக இணையத்தில் பல மென்பொருட்கள் இருக்கின்றன.இது ஒரு அறிவுக்காக மட்டுமே

    //நட்புடன் ஜமால் said...
    'tamil' எனும் folderஐ லாக் செய்ய எழுதியுள்ளீர்கள் இதையே parameters pass செய்து எந்த folderக்கும் (notepadல் மாற்றம் செய்யாமலே) ஏதுவாக எழுதிடுங்களேன்

    முயற்ச்சி செய்கின்றேன் நண்பரே.

    //Anonymous said...
    இது Windows Explorer மாத்திரம் தான் வேலை செய்யும்.
    முழுவதுமாக பாதுகாப்பில்லை.

    இது ஒரு அறிவுக்காக மட்டுமே

    ReplyDelete
  8. மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே

    ReplyDelete
  9. Long time I search for this...
    நல்ல தகவல்... மிக்க நன்றி
    H. Sultan, K.S.A

    ReplyDelete
  10. wow suuuuuuuupera irukku :)

    ReplyDelete
  11. அருமையான பதிவு....

    ReplyDelete
  12. Win7 இல் வேலை செய்வதில்லை .... Lock.bat ஐ open செய்து விட்டு என் Folder இல் Access செய்தால் Access ஆகுகிறது.....

    ReplyDelete
  13. we are expecting like it. Thank u

    ReplyDelete