Featured Posts

TamilhackX

Saturday, October 31, 2009

PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ?

இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது.

இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும்.

இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம்


முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள்

பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இடத்தில் PowerPoint இல் authorSTREAM என்ற tab ஐக் click செய்து அதில் உள்ள Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து வீடியோ என்பதைக் Click செய்யவும்.

அப்போது authorSTREAM ஆனது YouTube தளத்தில் உங்களுக்கான வீடியோவைத் தேடி பட்டியலிடும் அதில் உங்களுக்கு விரும்பிய வீடியோவின் கீழ் இருக்கும் பச்சைக் நிற Preview button ஐக் click செய்து அந்த வீடியோவின் Preview ஐப் பார்த்துவிட்டு Insert பண்ணிக் கொள்ள முடியும். அல்லது Insert by URL என்பதைக் Click செய்து உங்களுக்கு விரும்பிய வீடியோவின் URL ஐக் கொடுப்பதன் மூலமும் வீடியோக்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

அதே போல Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து Image என்பதைக் Click செய்து Bing தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் படங்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

நீங்கள் authorSTREAM தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உருவாகிய PowerPoint Presentation களை Upload பண்ணி உங்களுக்கு விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .

மென்பொருளைத் தரவிறக்க : http://www.authorstream.com/desktop/

10 on: "PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ?"
  1. unable to see tamilish button. please add this. i came from blogger.com. not from tamilish. you should make it easy for others to vote.

    ReplyDelete
  2. வாங்க shirdi.saidasan
    மன்னிக்கவும். சில நேரங்களில் Tamilish திட்டி எனது ஆக்கங்களை வெளியிடுவதில்லை அதனால் அந்த ஆக்கங்களின் Vote எப்போதும் 1 ஆகவே இருக்கின்றது.
    இந்த நிலை எனது ஆக்கங்களின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் முதலில் நிறுவியிருந்த Tamilish vote button ஐ நீக்கினேன்.

    ReplyDelete
  3. துவாரகன்November 1, 2009 at 10:43 AM

    பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. மிக்க நன்றி துவாரகன்

    ReplyDelete
  5. உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
    http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.html

    ReplyDelete
  6. மிக்க நன்றி ரஹ்மான், முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  7. நீங்கள் பதியும் பயனுள்ள பதிவுகள் மேலும் பலரை வேகமாகச் சென்றடைய திரட்டிகள் உதவுமே..சில சமயங்களில் திரட்டிகள் உங்கள் ஆக்கங்களைப் பிரசுரிக்காமல் விடுவதால் உங்களுக்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாதே.!?இப்போதிருக்கும் நிலையான வாசகர் வட்டம் அதனால் இழக்கப்படாதே..!?

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி jkrworld

    ReplyDelete