அன்று ஒரு நாள் வலையில் மேய்ந்து கொண்டு இருக்கும் போது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தான் archive.org இத் தளம் சற்று வித்தியாசமானதும் சுவரசியமானதுமாகும்.
இத் தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் இத் தளமானது நீங்கள் முகவரி கொடுத்த இணயம் ஆரம்பித்த காலத்திலிருந்து எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். நீங்கள் படத்தில் பார்ப்பது 1998 ஆம் ஆண்டு Google முதல் முதலாக வெளியிட்ட இணையப் பக்கமாகும்.
நீங்கள் விரும்பிய முகவரியக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்
தள முகவரி: http://www.archive.org/