Featured Posts

TamilhackX

Saturday, October 31, 2009

PowerPoint 2007 இல் YouTube வீடியோக்களை இணைப்பது எப்படி ?

- 10 comments
இவ்வளவு காலமும் PowerPoint இல் படங்களை இணைத்து வந்த நாம் இனி மேல் வீடியோக்களையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதியை authorSTREAM Desktop என்ற ஒரு சிறிய Plugin தருகிறது.

இந்த Plugin மூலம் YouTube தளத்தில் இருந்து வீடியோக்களையும் Bing தேடுபொறியில் இருந்து Image களையும் நேரடியாக PowerPoint Slide இல் இணைக்க முடியும்.

இனி எவ்வாறு powerPoint இல் வீடியோக்களை இணைக்கலாம் என்று பார்ப்போம்


முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து authorSTREAM Desktop என்ற Plugin ஐத் தரவிறக்கிக் Install பண்ணிக் கொள்ளுங்கள்

பின் PowerPoint இல் உங்களுக்குத் தேயையான Slide ஐத் தயாரித்துவிட்டு வீடியோ தேயைப்படும் இடத்தில் PowerPoint இல் authorSTREAM என்ற tab ஐக் click செய்து அதில் உள்ள Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து வீடியோ என்பதைக் Click செய்யவும்.

அப்போது authorSTREAM ஆனது YouTube தளத்தில் உங்களுக்கான வீடியோவைத் தேடி பட்டியலிடும் அதில் உங்களுக்கு விரும்பிய வீடியோவின் கீழ் இருக்கும் பச்சைக் நிற Preview button ஐக் click செய்து அந்த வீடியோவின் Preview ஐப் பார்த்துவிட்டு Insert பண்ணிக் கொள்ள முடியும். அல்லது Insert by URL என்பதைக் Click செய்து உங்களுக்கு விரும்பிய வீடியோவின் URL ஐக் கொடுப்பதன் மூலமும் வீடியோக்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

அதே போல Search என்ற இடத்தில் உங்களுக்கு வேண்டிய தலைப்பைக் கொடுத்து Image என்பதைக் Click செய்து Bing தேடுபொறியில் தேடிக் கிடைக்கும் படங்களை Insert பண்ணிக் கொள்ள முடியும்.

நீங்கள் authorSTREAM தளத்தில் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் உருவாகிய PowerPoint Presentation களை Upload பண்ணி உங்களுக்கு விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .

மென்பொருளைத் தரவிறக்க : http://www.authorstream.com/desktop/

Wednesday, October 28, 2009

My Computer இல் இருந்து Floppy Drive இன் Icon ஐ நீக்குவது எப்படி?

- 2 comments
தற்போது Floppy Drive இன் பாவனை இல்லை என்று சொல்லுமளவுக்கு Floppy Drive இன் பாவனை இல்லாமல் போய் விட்டது என்றாலும் விண்டோஸ் இன் My Computer இல் Floppy Drive இன் Icon ஒரு தேவையில்லாத ஒரு Icon ஆக இருக்கின்றது.

இந்த Floppy Drive இன் Icon னை எவ்வாறு My Computer இல் இருந்து தற்காலிகமாக நீக்குவது என்று பாப்போம்

முதலில் Run க்கு சென்று devmgmt.msc என Type செய்து Ok பண்ணவும். அல்லது My Computer இன் Icon இல் Right click செய்து Device Manager என்பதை தெரிவு செய்யவும்.

அப்போது Device Manager ஆனது Open ஆகும்.

அதில் Floppy Disk Drive என்பதன் முன்னால் இருக்கும் + குறியீட்டைக் Click செய்யவும். பின் அதில் வரும் Floppy Disk Drive என்பதன் மேல் Right Click செய்து Disable என்பதை Click செய்யவும்.

அப்போது வரும் "disabling this device will cause it to stop functioning. Do you really want to disable it?" என்ற Meassage box இல் yes என்பதை தெரிவு செய்யவும்.

இப்பொழுது உங்கள் My computer இல் இருந்து Floppy Drive இன் icon மறைந்திருக்கும்.

எதாவது சந்தர்ப்பத்தில் உங்களுக்கு Floppy Drive தேவைப்பட்டால் மேற்கூறிய முறையில் Device Manager க்கு சென்று Floppy Disk Drive ஐ Enable பண்ணிக் கொள்ள முடியும்.