கணணிப் பயன்பாட்டாளர் களிடையே Pen drive வைப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. என்ற நிலை உருவாக்கி விட்டது ஆனால் அந்த Pen drive நம் கையில் இருக்கும் மட்டும் தான் அதில் இருக்கும் தகவலுக்குப் பாதுகாப்பு நாம் அதை எங்காவது மறந்து போய் விட்டு விட்டோம் என்றால் Pen drive எடுக்கும் எவரும் நமது Pen drive வில் இருக்கும் தகவலை பார்கவோ அல்லது அதை Copy பண்ணி எடுக்கவோ முடியும்.
இதற்காக தற்போது imation போன்ற சில Pen drive தயாரிக்கும் நிறுவனங்கள் தாம் தயாரிக்கும் Pen drive க்கு Password போட்டு பாதுகாக்கக் கூடியவாறு அதனுடன் சிறிய மென்பொருளையும் இணைத்து தருகிறார்கள் ஆனால் அந்த மென்பொருட்களை இந்த வகை Pen drive களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடிகிறது.
அப்ப மற்றவர்கள் என்ன பண்ண............... ? ஆமாம் அவர்களுக்காக உள்ள மென்பொருள் தான் Rohos Mini Drive இதன் முலம் Pen drive வின் ஒரு பகுதியை தனியாக Patition பண்ணி அந்த பகுதிக்கு Password கொடுக்க முடியும்.
செயற்படுத்தும் முறை
- முதலில் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்.
- அந்த மென்பொருளை உங்கள் கணணியில் install பண்ணவும்.
- Pen drive கணணியில் இணைத்து விட்டு install பண்ணிய அந்த மென்பொருளை இயக்கவும்.
- அதில் Setup USB key என்பதை Click செய்தவுடன் உங்கள் Pen drive பற்றிய தகவலை காட்டும் அதன் கீழ் Password கேட்பார்கள் .
- அந்த தகவல் சரியாயில் அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் Password டைக் கொடுத்துவிட்டு Create disk ஐ கிளிக் செய்யவும். ( அந்த தகவலில் ஏதேனும் பிழையிருப்பின் Change என்பதை கிளிக் செய்து தகவலை மாற்றலாம் )
அது தானகவே உங்கள் Pen drive இன் ஒரு பகுதிக்கு Password போட்டு விடும் பின் உங்கள் pen drive ஐ கணணியில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் இணைக்கவும்.
பின் கணணியில் இணைத்தவுடன் Pen drive வில் இருக்கும் Rohos mini.exe என்பதை Double click செய்து உங்கள் password கொடுத்து விட்டு My computer ஐ open பண்ணிப் பார்த்தால் புது Drive ஒன்று இருக்கும். அந்த Drive தான் நீங்கள் password கொடுத்திருக்கும் drive.
அதனுள் நீங்கள் பாதுகாக்க வேண்டிய File போட்டு வைத்துவிட வேண்டியது தான் மீண்டும் அந்த
Password போட்ட drive ஐ மூடுவதற்கு படத்தில் உள்ளது போல் உங்கள் taskbar இல் இருக்கும் அந்த Icon ஐ Right click செய்து Disconnect என்பதை Click செய்யவும்.
மேலதிக விபரங்களுக்கு : http://www.rohos.com/products/rohos-mini-drive/
மென்பொருளைத் தரவிறக்க : http://www.rohos.com/rohos_mini.exe
நன்றி....நன்றி... ரொம்ப நாளா இப்படி ஒரு மென்பொருள் கிடைக்காதா வென தேடிக் கொண்டிருந்தேன். இந்த மாதிரி விசயம் தெரிஞ்ச மகராசன்கள் தெரியாத மக்களுக்கு சொல்லிக் கொடுத்தா ரொம்ப பிரயோஜனமா இருக்கம் மகராசா... அத வுட்டு புட்டு மக்கா என்னென்னவோ எழுதிக் கெடுக்குதுகோ...நல்லா இருங்கோ..
ReplyDeleteமிக்க நன்றி இருமேனிமுபாரக் அவர்களே
ReplyDeleteநல்ல தகவல். நன்றி
ReplyDeletegreat !!!!!!!
ReplyDeleteமிக்க நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன் , Senthil
ReplyDeleteநல்ல பதிவு. பென் டிரைவ் தொடர்பாக மேலும் பதிவுகளை எழுதுங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி பிரபு
ReplyDeleteMy many days hard search ends here in simple & easy way.
ReplyDeleteGood work. Welldone.. Keep going bro...
Prince
thanks bro..
ReplyDeleteமிக்க மிக்க நன்றி....
ReplyDelete