Featured Posts

TamilhackX

Monday, May 25, 2009

விரும்பிய மென்பொருளை System Tray இல் minimize பண்ணுவது எப்படி?

System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும்


நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது System tray இல் Minimize ஆவதை நாம் அவதானித்திருப்போம். அதே போல நாம் விரும்பிய மென்பொருட்களை System tray இல் Minimize பண்ண முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.

System tray இல் Minimize பண்ணுவதனால் Taskbar இல் இடம் மீதப்படுத்தப்படும் அது மட்டும் அல்லாது தனிப்பட்ட விடயங்களைப் பார்க்கும் போது வேறு யாரவது வந்தால் System tray இல் Minimize பண்ணினால் அவரால் கண்டுபிடிக்க இயலாது. இவ்வாறு பல நன்மைகள் உண்டு

இனி எவ்வாறு System tray இல் Minimize பண்ணலாம் என்று பார்ப்போம்

நாம் விருபிய Software களை System tray இல் Minimize பண்ணுவதற்கு உதவுவதுதான் TrayIt! என்ற இந்த மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருளாகும். கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download செய்த பின் மென்பொருளை Open பண்ணியதும் நமது கணணியின் தற்போது Open பண்ணி வைத்திருக்கும் மென்பொருள்களில் பெயர்கள் அதில் வரிசைப்படுத்தப்படும் பின் அதில் நாம் System tray இல் Minimize பண்ணவேண்டிய மென்பொருளில் Right click செய்து Place in System tray என்பதை Click செய்தவுடன் நாம் தெரிவுசெய்த மென்பொருள் System tray இல் Minimize ஆவதைக் காணலாம்


2 on: "விரும்பிய மென்பொருளை System Tray இல் minimize பண்ணுவது எப்படி?"
  1. Will this minimize Virtual Box?

    ReplyDelete
  2. Virtual Box இனுள் கண்டிப்பாக வேலை செய்யும்.

    Virtual Box ஆனது Windows இனுள் இன்னொரு Windows ஐ வேலை செய்ய வைப்பதற்கான ஒரு ஊடகம்

    ஆகவே உள்ளே வேலை செய்யும் Windows இனுள் Virtual Box எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    ReplyDelete