விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ? என்று முதல் ஒரு பதிவிட்டேன் அது StartBtn Renamer என்ற மென்பொருளை பாவித்து மாற்றும் முறை ஆனால் அதனால் மாற்றம் செய்யும் பெயர் சிறிது நேரத்தின் பின் பழையபடி Start என்று மாறிவிட்டுகிறது என்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். அதனால் நிரந்தரமாக Start button இன் பெயரை மாற்றுவது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்.
இனி System File களுடன் விளையாடப் போகின்றோம் மிகக் கவனமாக பின்வரும் செயல்முறையை செய்யவும்.
முதலில் ResHacker என்ற இந்த மென்பொருளை இங்கே Click செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
- பின் உங்கள் கணணியின் C Drive இன் Windows என்ற Folder க்குள் ( C:\WINDOWS ) உள்ள explorer.exe என்ற File ஐ Copy பண்ணி வேறு ஒரு Folder இல் Paste பண்ணவும்.
- பின் ResHacker ஐ Open பண்ணி அதனுள் வெளியில் Copy பண்ணி வைத்த explorer.exe என்ற File ஐ இழுத்து அதனுள் விடவும் (drag and drop)
- பின் படத்தில் காட்டியவாறு String Table முன் உள்ள + அடையாளத்தை Click செய்து அதில் 37வது Folder இன் முன் உள்ள + அடையாளத்தை Click செய்து 1033 என்பதை click பண்ணவும்.
- வலப்பக்கத்தில் உள்ள Start என்பதற்காக நீங்கள் மாற்ற விரும்பிய பெயரைக் கொடுத்து பின் மேல் உள்ள Compile Script என்பதை Click செய்யவும்.
- பின் File சென்று Save as என்பதில் explorer123.exe என பெயர் கொடுத்து Save பண்ணவும்.
- பின் Save பண்ணிய explorer123.exe ஐ C:\WINDOWS என்ற Folder இல் Paste செய்யவும்.
- பின் Run இல் regedit என type செய்து Registry Editor ஐ Open பண்ணிக் கொள்ளவும்.
- பின் அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற ஒழுங்கில் செல்லவும்.
- பின் Winlogon என்பதை Click செய்து அதன் வலப்பக்கத்தில் உள்ள Shell என்பதை Right click செய்து Modify என்பதை கிளிக் செய்து Value data என்ற இடத்தில் explorer123.exe என Type செய்யவும்
- பின் உங்கள் கணணியை Restart பண்ணவும் இனி உங்கள் கணணியில் நிரந்தரமாகவை Start இன் பெயர் மாறியிருக்கும்.
நீங்கள் பழையபடி Start என்ற பெயர் வேண்டும் என்றால் மேற் கூறிய முறையில் Registry Editor க்கு சென்று Shell ஐ Modify பண்ணி Value data என்ற இடத்தில் explorer.exe என என கொடுத்து உங்கள் கணணியை Restart பண்ணவும். செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூற மறக்க வேண்டாம்.
மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.
ReplyDeleteமிக்க நன்றி.
மிக்க நன்றி Thuvarakan
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி நண்பரே.
மிக்க நன்றி The Rebel
ReplyDeleteம்ம்..அடுத்த பதிவு Tool Bar அசைக்கிறது பற்றித்தானே??!
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி...TamilhackX..
G.R..
i need alternative software for proshow gold (photo slide show software)
மிக்க நன்றி..
மிக்க நன்றி sinmajan, G.R
ReplyDeleteG.R அவர்களை
மைக்ரோசாப்ட் இன் இந்த மென்பொருளை முயற்சி செய்து பாருங்கள்
http://www.microsoft.com/windowsxp/using/digitalphotography/PhotoStory/default.mspx
அல்லது
http://www.ourpix.com/photo-story.html
mikka nantru swlrk@yahoo.co.uk ennudan thodarpukolla mudiyuma
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeletetamilhackx@gmail.com என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்
ithanai seithu mudiththa pin seiyappadda user account il nangu velai seigintrathu anal matraya account kalil start bar a thontravillai
ReplyDelete