Featured Posts

TamilhackX

Friday, June 26, 2009

Blogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி ?

- 23 comments
Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம் என்று பார்ப்போம் .
  • முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ பெற்றுக் கொள்ளவும்.
உதாரணம்
http://your-server.com/uploads/tamilsong.mp3
  • பின் கீழ் உள்ள Audio player களில் நீங்கள் விரும்பிய Audio player இன் கீழ் உள்ள Code ஐ Copy செய்து உங்கள் தளத்தில் Paste செய்யவும இதில் இருக்கும் MUSIC_FILE_URL என்பதுக்குப் பதிலாக உங்கள் பாடலின் URL ஐக் கொடுக்கவும்.

<embed type="application/x-shockwave-flash" src="http://www.google.com/reader/ui/3247397568-audio-player.swf?audioUrl=MP3_FILE_URL" width="400" height="27" allowscriptaccess="never" quality="best" bgcolor="#ffffff" wmode="window" flashvars="playerMode=embedded" />





<embed src="http://webjay.org/flash/dark_player" width="400" height="40" wmode="transparent" flashVars="playlist_url=MP3_FILE_URL&amp;skin_color_1=-145,-89,-4,5&skin_color_2=-141,20,0,0" type="application/x-shockwave-flash" />




<embed type="application/x-shockwave-flash" src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" width="400" height="52" allowScriptAccess="always" wmode="transparent" flashvars="audio_duration=DURATION&amp;external_url=MP3_FILE_URL" />

Sunday, June 21, 2009

Potable Software களை இலகுவாக pen drive இல் நிர்வகித்தல்

- 12 comments
நீங்கள் உங்கள் Pen Drive இல் அதிகம் Potable Software களை கொண்டு திரிபவரா ? அப்படி என்றால் எந்த Folder இல் எதை போட்டு வைத்தோம் என்று பல நாள் தடுமாறியிருப்பீர்கள்.
இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிர்த்து இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.

இந்த மென்பொருளை உங்கள் pen Drive இல் Install பண்ணி வைத்தீர்கள் என்றால் Windows இன் Start menu போல படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கத்தில் காட்சி அளிக்கும்

இந்த மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download பண்ணிக் கொள்ளுங்கள் பின் உங்கள் pen drive வை கணணியில் இணைத்துவிட்டு இந்த மென்பொருளை Install பண்ணுங்கள்.

பின் அதில் உள்ள options க்கு சென்று அதில் உள்ள Application Manager மூலம் உங்களிடம் உள்ள Potable Software களையும் அதில் Install பண்ணி வைத்துக்கொள்ளவும் தேவையில்லாதவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்கும் : http://www.codyssey.com/products/codysafe.html

இனி என்ன பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்

Sunday, June 14, 2009

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை நிரந்தரமாக மாற்றுவது எப்படி ?

- 10 comments
விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ? என்று முதல் ஒரு பதிவிட்டேன் அது StartBtn Renamer என்ற மென்பொருளை பாவித்து மாற்றும் முறை ஆனால் அதனால் மாற்றம் செய்யும் பெயர் சிறிது நேரத்தின் பின் பழையபடி Start என்று மாறிவிட்டுகிறது என்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். அதனால் நிரந்தரமாக Start button இன் பெயரை மாற்றுவது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்.
இனி System File களுடன் விளையாடப் போகின்றோம் மிகக் கவனமாக பின்வரும் செயல்முறையை செய்யவும்.
முதலில் ResHacker என்ற இந்த மென்பொருளை இங்கே Click செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • பின் உங்கள் கணணியின் C Drive இன் Windows என்ற Folder க்குள் ( C:\WINDOWS ) உள்ள explorer.exe என்ற File ஐ Copy பண்ணி வேறு ஒரு Folder இல் Paste பண்ணவும்.
  • பின் ResHacker ஐ Open பண்ணி அதனுள் வெளியில் Copy பண்ணி வைத்த explorer.exe என்ற File ஐ இழுத்து அதனுள் விடவும் (drag and drop)
  • பின் படத்தில் காட்டியவாறு String Table முன் உள்ள + அடையாளத்தை Click செய்து அதில் 37வது Folder இன் முன் உள்ள + அடையாளத்தை Click செய்து 1033 என்பதை click பண்ணவும்.
  • வலப்பக்கத்தில் உள்ள Start என்பதற்காக நீங்கள் மாற்ற விரும்பிய பெயரைக் கொடுத்து பின் மேல் உள்ள Compile Script என்பதை Click செய்யவும்.
  • பின் File சென்று Save as என்பதில் explorer123.exe என பெயர் கொடுத்து Save பண்ணவும்.
  • பின் Save பண்ணிய explorer123.exe C:\WINDOWS என்ற Folder இல் Paste செய்யவும்.
  • பின் Run இல் regedit என type செய்து Registry Editor ஐ Open பண்ணிக் கொள்ளவும்.
  • பின் அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற ஒழுங்கில் செல்லவும்.
  • பின் Winlogon என்பதை Click செய்து அதன் வலப்பக்கத்தில் உள்ள Shell என்பதை Right click செய்து Modify என்பதை கிளிக் செய்து Value data என்ற இடத்தில் explorer123.exe என Type செய்யவும்
  • பின் உங்கள் கணணியை Restart பண்ணவும் இனி உங்கள் கணணியில் நிரந்தரமாகவை Start இன் பெயர் மாறியிருக்கும்.
நீங்கள் பழையபடி Start என்ற பெயர் வேண்டும் என்றால் மேற் கூறிய முறையில் Registry Editor க்கு சென்று Shell ஐ Modify பண்ணி Value data என்ற இடத்தில் explorer.exe என என கொடுத்து உங்கள் கணணியை Restart பண்ணவும். செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூற மறக்க வேண்டாம்.

Saturday, June 13, 2009

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?

- 17 comments
விண்டோஸ் 7 , விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும் மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End, Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்

பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும்.

இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளது

மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/36qada80pl

Wednesday, June 3, 2009

நாம் விரும்பிய Run Command ஐ உருவாக்குவது எப்படி ?

- 10 comments
Run ஆனது விண்டோஸ் இல் மிக பிரதான பங்கு வகிக்கிறது. இது நமது வேலையை இலகுவாக்குவதகாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். விண்டோஸ் இல் சில Program ஐ open பண்ணுவதற்கு சில Run commands உண்டு உதாரணமாக Start---> All Programs---> Accessories சென்று Calculator ஐ திறப்பதுக்கு பதிலாக Run இல் Calc என Type செய்து Enter பண்ணி Calculator ஐ இலகுவாக திறக்கலாம்.

இவ்வாறு குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாட்டுக்காக Windows இல் சில command கள் default ஆக உள்ளது. இவ்வாறான commands ஐ நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்களுக்கு உருவாக்கினால் ஒவ்வோரு முறையும் Start----> All Programs சென்று நேரத்தினை வீணடிக்காமல் Run command மூலம் நம் வேலையை இலகுவாக்கிக் கொள்ள முடியும்.

இனி எவ்வாறு நாம் விரும்பிய Run Commands ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்

முதலில் Run ஐ open பண்ணி அதில் %windir% என Type செய்து Enter செய்யவும் அப்போது என்ற WINDOWS என்ற Folder திறக்கும் பின் அந்த Folder இல் File க்கு சென்று அதில் New என்பதை தெரிவுசெய்து Shortcut என்பதை Click செய்யவும்.(File--->New--->Shortcut) அப்போது வரும் Create Shortcut என்ற Dialog box இல் விரும்பிய மென்பொருளை தெரிவு செய்து Next ஐ Click செய்யவும் Type a name for this shortcut என்ற இடத்தில் நீங்கள் run command ஆக கொடுக்க விரும்பிய பெயரைக் கொடுத்து Finish ஐ click பண்ணவும்.

அவ்வளவு தான் இனி நீங்கள் உருவாக்கிய command ஐ run க்கு சென்று பரீட்ச்சித்துப் பார்க்கவும்