Featured Posts

TamilhackX

Saturday, June 13, 2009

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?

விண்டோஸ் 7 , விண்டோஸ் Vista என Microsoft இன் புதிய பதிப்புகள் வந்தாலும் இன்றும் மிகக் கூடுதலானவர்களினால் விண்டோஸ் XP ஆனது பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது இந்த XP இல் Start என்ற பெயருக்கு ஒரு தனி இடம் உண்டு.

ஒரு மாற்றத்துக்காக Start என்ற பெயருக்கு பதிலாக Hello, Virus, Click, End, Begin போன்ற வித்தியாசமான பெயரை வைத்தால் ஒரே பெயரைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போன நமக்கு இவ்வாறான வித்தியாசமான பெயர்கள் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

விண்டோஸ் XP இன் Start button க்கு நாம் விரும்பிய பெயரை StartBtn Renamer என்ற இந்த இலவச மென்பொருள் மூலம் மாற்ற முடியும் கீழ் உள்ள சுட்டியில் இருந்து மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளவும்

பின் இம் மென்பொருளில் New Lable என்ற இடத்தில் மாற்ற விரும்பும் புதிய பெயரைக் கொடுத்து Rename it என்பதைக் Click செய்யவும். அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த பெயர் Start என்ற பெயருக்குப் பதிலாக மாறியிருக்கும்.

இது ஒரு Open Source Software என்பதால் இதன் Source file இம் மென்பொருளுடன் தரப்பட்டுள்ளது

மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/36qada80pl

17 on: "விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ?"
  1. மென்பொருள் தரவிறக்கம் இல்லாமலேயே இப்படி செய்யலாம் என்று கேள்விபட்டிருக்கிறேன். உண்மையா ?

    ReplyDelete
  2. மிக்க நன்றி யூர்கன் க்ருகியர்
    ஆம் நீங்கள் செய்வது உண்மைதான். Start button இன் பெயரை மாற்றுவதுக்கு வேறு முறை இருக்கிறது.

    அந்த முறை கொஞ்சம் நம் System file களுடன் சிறிது விளையாட வேண்டி இருக்கும்.
    தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் கூறவும் அடுத்த பதிவுகளில் இடுகிறேன்.

    ReplyDelete
  3. எளிதாக தரவிறக்கம் செய்து மாற்றம் செய்ய முடிகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //தெரிந்து கொள்ள ஆர்வம் இருந்தால் கூறவும் அடுத்த பதிவுகளில் இடுகிறேன்.//

    நேரம் இருப்பின் பதியவும்.
    நன்றி நன்றி நன்றி :)

    ReplyDelete
  5. சூப்பரா வொர்க் பண்ணுது. ரொம்ப நன்றி

    ReplyDelete
  6. வணக்கம் பதிவரே, நீங்கள் கூறியுள்ளதுபோல் விரைவாக பெயர் மாற்றம் பெறுகிறது. ஆனால் மாற்றப்பட்ட பெயர் குறைந்ததது மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. பின்னர் வழக்கம் போல் START என்று மாறிவிடுகிறது. ஏன் என்று கூற முடியுமா?
    நன்றி...

    ReplyDelete
  7. மிக்க நன்றி பிரவின் குமார், யூர்கன் க்ருகியர், S.A. நவாஸுதீன், வான்முகிலன், nambi

    ReplyDelete
  8. // மாற்றப்பட்ட பெயர் குறைந்ததது மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை மட்டுமே இருக்கிறது. பின்னர் வழக்கம் போல் START என்று மாறிவிடுகிறது. ஏன் என்று கூற முடியுமா?

    பயன்படுத்திப் பார்த்துவிட்டு கருத்துக் கூறியதுக்கு மிக்க நன்றி வான்முகிலன்.
    ஆம் நீங்கள் கூறியது போல் சிறிது நேரத்தில் START என்ற பெயரே வருகிறது. நிரந்தரமாக மற்றும் முறையை அடுத்த பதிவில் இடுகிறேன் அதுவரை காத்திருக்கவும்.

    ReplyDelete
  9. உங்களுடைய இந்த பதிவ சுட சுட சுட்டுட்டாங்களே. சுட்டு மீண்டும் தமிழிஷிலேயே போடுர அளவுக்கு என்ன ஒரு தைரியம்.

    http://srs-bharathi.blogspot.com/2009/06/xp-start-button-7-vista-microsoft-xp-xp.html

    ReplyDelete
  10. they have stolen the same story in one another blog

    http://annai-illam2.blogspot.com/2009/06/xp-start-button.html

    ReplyDelete
  11. மிக்க நன்றி Karthi, shirdi.saidasan

    //உங்களுடைய இந்த பதிவ சுட சுட சுட்டுட்டாங்களே. சுட்டு மீண்டும் தமிழிஷிலேயே போடுர அளவுக்கு என்ன ஒரு தைரியம்.

    என்னங்க செய்யிறது?
    அவங்களும் கூடிய விரைவில் சுயமாக பதிவுகள் எழுத வாழ்த்துகள் மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். மறப்போம்! மன்னிப்போம்!

    ReplyDelete
  12. அருமையான தகவல்..
    \\
    என்னங்க செய்யிறது?
    அவங்களும் கூடிய விரைவில் சுயமாக பதிவுகள் எழுத வாழ்த்துகள் மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். மறப்போம்! மன்னிப்போம்!\\

    கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே!!!!..
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. சுட்டுட்டாங்க தலைவா

    http://annai-illam2.blogspot.com/2009/06/xp-start-button.html

    ReplyDelete
  14. மிக்க நன்றி G.R, சூர்யா ௧ண்ணன்

    ReplyDelete
  15. Start button இன் பெயரை நிரந்தரமாக மற்றும் முறை
    http://tamilhackx.blogspot.com/2009/06/start-button.html

    ReplyDelete
  16. தலை..உங்கடையே பலர் ஆட்டையைப் போட்டு tamilishலையே இடுகிறாங்க..
    இவ்வளவு விரைவாயே அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டீங்க..வாழ்த்துக்கள்..
    ஆனால் உழைப்புத் திருடப்படுகிறது..
    ஏதாவது செய்யணும்..

    ReplyDelete
  17. மிக்க நன்றி
    www.servermela.com

    ReplyDelete