Featured Posts

TamilhackX

Sunday, July 26, 2009

Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவது எப்படி ?

- 12 comments
Torrent எனப்படுவது ஒரு குறிப்பிட்ட File களை Web Server இல் இருந்து download பண்ணாமல் பலரது கணணிகளினுடாக விரும்பிய File ஐ பகிர்ந்து கொள்ளும் ஒரு தொழில்நுட்பமாகும்.

Torrent இனுடாக ஒரு File ஐ download பண்ணுவதற்கு நமது கணணியில் μTorrent அல்லது Bittorrent என்ற மென்பொருள் இருத்தல் அவசியம்.

Seeds, Leechers என்றால் என்ன ?
நீங்கள் download பண்ணும் File ஐ முழுமையாக வைத்திருப்பவர்களை இங்கு நாம் Seeds என அழைக்கின்றோம். நீங்கள் download பண்ணும் File ஐ உங்களைப் போல download பண்ணிக் கொண்டு இருப்பவரை Leechers என அழைக்கின்றோம்

Torrent வழங்கும் சில இணையத்தளங்கள்

Torrent ஊடாக விரும்பிய File ஐ டவுன்லோட் பண்ணுவது எப்படி?
  • முதலில் μTorrent என்ற மென்பொருளை உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
  • பின் மேல் உள்ள Torrent ஐ வழங்கும் எதாவது இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு விரும்பிய Torrent File ஐ download பண்ணிக் கொள்ளவும்
  • பின் μTorrent என்ற மென்பொருளை திறந்து அதனுள் இழுத்து விடவும்
  • அவ்வளவுதான் அந்த File ஐ download பண்ணி முடிந்ததும் அந்த File ஆனது My Documents இல் Downloads என்ற folder இல் save செய்யப்பட்டு இருக்கும்.
Torrent ஐ download பண்ணும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

Torrent ஐ download பண்ணும் போது Seeds அதிகமாக உள்ள File ஐ தெரிவு செய்து download பண்ண வேண்டும் அப்பொழுதுதான் நீங்கள் விரும்பிய File ஐ முழுமையாக வேகமாக download பண்ணி முடிக்க முடியும்.

Seeds கூடிய File களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் விரும்பிய பெயரைக் கொண்டு தேடினால் கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு விடை கிடைக்கும் இதில் உள்ள S என்பது Seeds ஐயும் L என்பது Leechers ஐயும் குறிக்கிறது நீங்கள் Seeds கூடியதைக் கண்டு பிடிப்பதற்கு S இன் மேல் Click பண்ணினால் Seeds கூடியது முதலாவதாகவும் Seeds குறைந்தது படிப்படியாக குறைந்து செல்லும் (Descending Order) ஒழுங்கில் அடுக்கப்படும். இதிலிருந்து Seeds கூடியயதைக் கண்டு பிடிக்கலாம்


சில வேளைகளில் மென்பொருட்களை download பண்ணும் போது அந்த மென்பொருள் சில நேரங்களில் Virus களினால் பாதிப்படைத்திருக்கக் வாய்ப்புக்கள் உண்டு. அதனால் Torrent இல் மென்பொருள் download பண்ணும் போது அந்த Torrent இனுடன் இருக்கும் அதைப் முன்னதாகவே download பண்ணியவர்களின் Comments ஐ வாசித்தபின் download பண்ணுவது பாதுகாப்பானதாகும்.

Saturday, July 4, 2009

μTorrent இன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

- 10 comments
Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.
இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்க்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும்.
அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்

அவ்வாறான நான்கு மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

µTorrent Acceleration Tool :Download here
µTorrent EZ Booster : Download here
µTorrent SpeedUp PRO : Download here
µTorrent Ultra Accelerator : Download here

இம் மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும்.

Friday, June 26, 2009

Blogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி ?

- 23 comments
Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம் என்று பார்ப்போம் .
  • முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ பெற்றுக் கொள்ளவும்.
உதாரணம்
http://your-server.com/uploads/tamilsong.mp3
  • பின் கீழ் உள்ள Audio player களில் நீங்கள் விரும்பிய Audio player இன் கீழ் உள்ள Code ஐ Copy செய்து உங்கள் தளத்தில் Paste செய்யவும இதில் இருக்கும் MUSIC_FILE_URL என்பதுக்குப் பதிலாக உங்கள் பாடலின் URL ஐக் கொடுக்கவும்.

<embed type="application/x-shockwave-flash" src="http://www.google.com/reader/ui/3247397568-audio-player.swf?audioUrl=MP3_FILE_URL" width="400" height="27" allowscriptaccess="never" quality="best" bgcolor="#ffffff" wmode="window" flashvars="playerMode=embedded" />





<embed src="http://webjay.org/flash/dark_player" width="400" height="40" wmode="transparent" flashVars="playlist_url=MP3_FILE_URL&amp;skin_color_1=-145,-89,-4,5&skin_color_2=-141,20,0,0" type="application/x-shockwave-flash" />




<embed type="application/x-shockwave-flash" src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" width="400" height="52" allowScriptAccess="always" wmode="transparent" flashvars="audio_duration=DURATION&amp;external_url=MP3_FILE_URL" />

Sunday, June 21, 2009

Potable Software களை இலகுவாக pen drive இல் நிர்வகித்தல்

- 12 comments
நீங்கள் உங்கள் Pen Drive இல் அதிகம் Potable Software களை கொண்டு திரிபவரா ? அப்படி என்றால் எந்த Folder இல் எதை போட்டு வைத்தோம் என்று பல நாள் தடுமாறியிருப்பீர்கள்.
இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிர்த்து இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.

இந்த மென்பொருளை உங்கள் pen Drive இல் Install பண்ணி வைத்தீர்கள் என்றால் Windows இன் Start menu போல படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கத்தில் காட்சி அளிக்கும்

இந்த மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download பண்ணிக் கொள்ளுங்கள் பின் உங்கள் pen drive வை கணணியில் இணைத்துவிட்டு இந்த மென்பொருளை Install பண்ணுங்கள்.

பின் அதில் உள்ள options க்கு சென்று அதில் உள்ள Application Manager மூலம் உங்களிடம் உள்ள Potable Software களையும் அதில் Install பண்ணி வைத்துக்கொள்ளவும் தேவையில்லாதவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்கும் : http://www.codyssey.com/products/codysafe.html

இனி என்ன பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்

Sunday, June 14, 2009

விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை நிரந்தரமாக மாற்றுவது எப்படி ?

- 10 comments
விண்டோஸ் XP இல் Start button இன் பெயரை மாற்றுவது எப்படி ? என்று முதல் ஒரு பதிவிட்டேன் அது StartBtn Renamer என்ற மென்பொருளை பாவித்து மாற்றும் முறை ஆனால் அதனால் மாற்றம் செய்யும் பெயர் சிறிது நேரத்தின் பின் பழையபடி Start என்று மாறிவிட்டுகிறது என்று பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். அதனால் நிரந்தரமாக Start button இன் பெயரை மாற்றுவது எவ்வாறு என்று இங்கு பார்ப்போம்.
இனி System File களுடன் விளையாடப் போகின்றோம் மிகக் கவனமாக பின்வரும் செயல்முறையை செய்யவும்.
முதலில் ResHacker என்ற இந்த மென்பொருளை இங்கே Click செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
  • பின் உங்கள் கணணியின் C Drive இன் Windows என்ற Folder க்குள் ( C:\WINDOWS ) உள்ள explorer.exe என்ற File ஐ Copy பண்ணி வேறு ஒரு Folder இல் Paste பண்ணவும்.
  • பின் ResHacker ஐ Open பண்ணி அதனுள் வெளியில் Copy பண்ணி வைத்த explorer.exe என்ற File ஐ இழுத்து அதனுள் விடவும் (drag and drop)
  • பின் படத்தில் காட்டியவாறு String Table முன் உள்ள + அடையாளத்தை Click செய்து அதில் 37வது Folder இன் முன் உள்ள + அடையாளத்தை Click செய்து 1033 என்பதை click பண்ணவும்.
  • வலப்பக்கத்தில் உள்ள Start என்பதற்காக நீங்கள் மாற்ற விரும்பிய பெயரைக் கொடுத்து பின் மேல் உள்ள Compile Script என்பதை Click செய்யவும்.
  • பின் File சென்று Save as என்பதில் explorer123.exe என பெயர் கொடுத்து Save பண்ணவும்.
  • பின் Save பண்ணிய explorer123.exe C:\WINDOWS என்ற Folder இல் Paste செய்யவும்.
  • பின் Run இல் regedit என type செய்து Registry Editor ஐ Open பண்ணிக் கொள்ளவும்.
  • பின் அதில் HKEY_LOCAL_MACHINE\ SOFTWARE\ Microsoft\ Windows NT\ CurrentVersion\ Winlogon என்ற ஒழுங்கில் செல்லவும்.
  • பின் Winlogon என்பதை Click செய்து அதன் வலப்பக்கத்தில் உள்ள Shell என்பதை Right click செய்து Modify என்பதை கிளிக் செய்து Value data என்ற இடத்தில் explorer123.exe என Type செய்யவும்
  • பின் உங்கள் கணணியை Restart பண்ணவும் இனி உங்கள் கணணியில் நிரந்தரமாகவை Start இன் பெயர் மாறியிருக்கும்.
நீங்கள் பழையபடி Start என்ற பெயர் வேண்டும் என்றால் மேற் கூறிய முறையில் Registry Editor க்கு சென்று Shell ஐ Modify பண்ணி Value data என்ற இடத்தில் explorer.exe என என கொடுத்து உங்கள் கணணியை Restart பண்ணவும். செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூற மறக்க வேண்டாம்.